விக்கிரவாண்டி தேர்தல் : இனிப்பு கொடுத்து கொண்டாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
விக்கிரவாண்டி தேர்தல் : விக்கிரவாண்டியில் நடைபெற்று பெரும் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில்வெற்றி கணிப்பு அதிகம் இருப்பதால் முதல்வர் முகஸ்டாலின் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார்.
கடந்த ஜூலை-10ம் தேதி (புதன்கிழமை) அன்று விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலானது நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா வேட்பாளர்களாக போட்டியிட்டனர். நடைபெற்று முடிந்த இந்த தேர்தலின் வாக்கு எணிக்கையானது இன்று காலை (ஜூலை-13) 8 மணி அளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும், தற்போது 10 சுற்றுகள் நிறைவடைந்த இந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பளரான அன்னியூர் சிவா அதிக அளவு வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார். 10-வது சுற்று வாக்கு எணிக்கை முடிவில் அவர் 63,205 வாக்குகள் பெற்று 35,360 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் சி.அன்புமணி 27,845 வாக்குகளும், நாதக வேட்பாளரான அபிநயா 5,265 வாக்குகளும் பெற்று தொடர் பின்னடைவை சந்தித்த வருகின்றனர். இந்நிலையில், திமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முன்னிலை பெற்று வருவதால் வெற்றி பெரும் வாய்ப்பும் அதிகரித்து உள்ளது.
இதன் காரணமாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அங்கு கூடி இருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார். அங்கு கூடி இருந்த தொண்டர்களும் இடை தேர்தலில் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகரித்துள்ளதால் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.