Vikravandi By election Result - DMK Candidate Anniyur Siva [File Image]
இடைத்தேர்தல் முடிவுகள்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் கடந்த ஜூலை 10ஆம் தேதி (புதன் கிழமை) அன்று நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிட்டுள்ளார். பாமக சார்பில் சி.அன்புமணி போட்டியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிட்டுள்ளார். அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது. மொத்தம் 29 வேட்பாளர்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 2.37 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் மொத்தம் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் 552 வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ண தொடங்கப்பட்டன.
முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. மொத்தம் 789 தபால் வாக்குகள் பதிவாகின. அவைகள் 2 மேசைகளில் எண்ணப்பட்டன. அதன் பின்னர் மிண்ண்னு வாக்குப்பதிவு எண்ணிக்கை 14 மேசைகளில் 20 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 134 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எண்ணும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…