விக்கிரவாண்டி : நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் வாக்குகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த ஜூலை-10 ம் தேதி (புதன்கிழமை) அன்று விக்கிரவாண்டி தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்று முடிவடைந்திருந்தது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டார். இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.
நடைபெற்று முடிந்த இந்த தேர்தலின் வாக்கு எணிக்கையானது இன்று காலை (ஜூலை-13) 8 மணி அளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்திலிருந்தே திமுக முன்னைலை பெற்றிருந்தது. அதன்படி மொத்தம் 19-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடையும் போது அன்னியூர் சிவா 50,ooo-திற்கும் அதிகமான வாக்குக்கள் வித்தியாசத்தில் இருந்ததால் திமுக வெற்றியை உறுதி செய்தது.
தற்போது அதிகாரப்பூர்வ தகவலில் திமுக சார்பாக நின்ற அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தார். அவரை தொடர்ந்து பாமக சார்பில் நின்ற சி.அன்புமணி 56,296 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். அதன் பிறகு 3-வது இடத்தில் நாதக கட்சியின் சார்பாக நின்ற அபிநயா 10,602 வாக்குகள் பெற்றுருக்கிறார்.
அபிநயா உட்பட அந்த தொகுதியில் அவருக்கு அடுத்தபடியாக உள்ள வேட்பாளர்களும் டெபாசிட் இழந்து தோல்வியை தழுவினார்கள். திமுக இந்த வெற்றியை, அக்கட்சி தொண்டர்கள் அங்கங்கே கொண்டாடி வருகின்றனர். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அண்ணா அறிவாலயத்தில் குவிந்திருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தார். மேலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வென்றதற்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…