Vikravandi [file image]
விழுப்புரம் : தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து, காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஜூன் 14-ஆம் தேதி முதல் ஜூன் 21-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது, இடைத்தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
ஜூலை 10-ஆம் தேதி தேர்தல் நடைபெற்று ஜூலை 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததோடு, தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி தொகுதி மட்டுமின்றி, தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில்…
சென்னை : தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று, அதாவது (ஏப்ரல் 1) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. …
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 அன்று, தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும்…
சென்னை : கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின்…
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், ஒரு வார கால ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS)…
மும்பை : ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச்…