விக்கிரவாண்டி : தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6- ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதனையடுத்து, காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஜூலை 10-இல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து, இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 14-ஆம் தேதி துவங்கியது. இதுவரை, மொத்தமாக 64 பேர் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழகர் கட்சி சார்பில் அபிநயா, பாமக சார்பில் சி.அன்புமணி, ஆகியோர் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு வேட்மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் தேமுதிக போட்டியிடவில்லை. ஜூன் 14-ஆம் தேதி துவங்கிய இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் கால அவகாசம் இன்று (ஜூன் 21) -ஆம் தேதி 3 மணியுடன் நிறைவடைந்துள்ளது. வரும் 24 ஆம் தேதி இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. அதைப்போல, வரும் 26-ஆம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கு கடைசி நாள்.
மேலும், இந்த விக்கிரவாண்டி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஜூலை 10-ஆம் தேதி நடைபெற்று, தேர்தலுக்கான முடிவுகள் ஜூலை 13-ஆம் தேதி வெளியிடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…
சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…
மதுரை : பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக யூ-டியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் கோவை போலீசார்…
சென்னை: இந்திய அரசால் அங்கீகரிப்பட்ட 24 மொழிகளில், சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்படும் நூலினை எழுதிய நூலாசிரியருக்குத் தற்போது…