விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் ! இதுவரை 2 பேர் வேட்புமனு தாக்கல்
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 2 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.செப்டம்பர் 23-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இது குறித்து கூறுகையில்,விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 2 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் .பேனர் விவகாரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.