சட்டத்திற்கு புறம்பான சித்தரவதை.. அதிகாரத்தை பயன்படுத்தி படுகொலை.? பிக்பாஸ் விக்ரமன் கடும் விமர்சனம்.!

senthil balaji

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டதற்கு பிக் பாஸ் புகழ் விக்ரமன் விமர்சனம் செய்துள்ளார்.  

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகம், தலைமை செயலக அறை என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இன்று அதிகாலை அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்து செல்ல முற்பட்டனர். தற்போது அவர் நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவரது கைது நடவடிக்கைக்கு பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் பிரபலமும், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகருமான விக்ரமன் தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். அதில், இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். 18 மணி நேரமாக ஒரு மனிதரை சட்டத்திற்கு புறம்பாக அடைத்துவைத்துஅமலாக்கத்துறை  சித்ரவதை செய்திருக்கிறது. இது அப்பட்டமான மனித உரிமை மீறல்.

ஒட்டுமொத்த சங்கிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த அமைச்சரை அரசியல் ரீதியில் எதிர்க்க தைரியமின்றி அதிகாரத்தை பயன்படுத்தி படுகொலை செய்ய பாஜக முயன்றுள்ளது என குற்றம் சாட்டி உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்