விகடன் இணையதளம் முடக்கம் : “பா.ஜ.க.வின் பாசிசத் தன்மை” முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

இதழியலில் நூறாண்டு காலமாக இயங்கி வரும் விகடன் இணையத்தளம் முடக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

mk stalin PM MODI

சென்னை : ஊடகத்துறையில் கிட்டத்தட்ட நுறு ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் விகடன் ஊடகத்தின் இணையத்தளம் மூடக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் கார்ட்டூனை வெளியிட்டதற்காக, விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, இந்த கார்ட்டூன் குறித்து மத்திய அரசுக்கு புகார் அளித்ததாகவும், அதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இணையத்தளம் மூடக்கம் செய்யப்பட்டது குறித்து விகடன் தரப்பில் கூறியதாவது ” கருத்து சுதந்திரம் எங்களின் அடிப்படை நிலைமை. எப்போதும் அதற்காகவே குரல் கொடுத்தோம். இனிமேலும் கொடுப்போம். எங்களுடைய இணையத்தளம் மூடக்கம் செய்யப்பட்டது.

எதற்காக மூடக்கம் செய்யப்பட்டது? என்பது குறித்து பார்த்து வருகிறோம். இந்த முடக்கம், உண்மையாகவே அரசின் நடவடிக்கை என்றால், அதை சட்டப்படி எதிர்க்க தயாராக இருக்கிறோம். எதிர்ப்புகள் வந்தாலும், உண்மையை பேசுவதை நிறுத்தமாட்டோம். இணையதளம் விரைவில் மீண்டும் செயல்படும்” எனவும் விகடன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த சூழலில், விகடன் இணையதளம் முடக்கம் செய்யப்பட்டதற்கு பாஜக தான் காரணம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” இதழியலில் நூறாண்டு காலமாக இயங்கி வரும் விகடனின் இணையத்தளம் முடக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல! பா.ஜ.க.,வின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு ஆகும். முடக்கப்பட்ட இணையத்தளத்துக்கு உடனடி அனுமதி வழங்கக் கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்