ஜி.கே.மணி இல்லத் திருமண விழாவில் விஜய் மகன் பங்கேற்பு! சால்வை, மாலை அணிவித்து கெளரவம்….
விஜய் மகனின் அரிதான இந்த பொதுவெளி தோற்றம் நிகழ்வில் கலந்து கொண்டவர்களிடமிருந்தும், சமூக ஊடக பயனர்களிடமிருந்தும் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றது.

சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நேற்று மாலை 6 மணியளவில் சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இந்த பிரம்மாண்ட திருமண விழாவில் ஜி.கே.மணியின் மகனும் லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவன முக்கிய நபருமான ஜி.கே.எம்.தமிழ்குமரனும் வருகை தந்தனர்.
அதேபோல நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட திரை பிரபலங்களும் வந்துள்ளனர். குறிப்பாக, நடிகரும், தவெக கட்சித்தலைவருமான விஜயின் மகன் ஜேசன் விஜய்யும் இத்திருமண நிகழ்வில் கலந்துகொண்டார். ஜேசன் சஞ்சய், முதல் முறையாக ஒரு அரசியல்வாதியின் திருமணத்தில் கலந்து கொண்டார்.
விஜய் எப்படி ஒரு நிகழ்வில் கலந்து கொள்வாரோ அதே லுக்குடன், அதே நடை பாவனையுடன் நடந்து கொண்ட ஜேசன் சஞ்சய்,விதம் அனைஅவரது கவனத்தையும் ஈர்த்தது. தனது பேரனின் திருமண விழாவுக்கு வந்த விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்க்கு ஒருபக்கம் ஜி.கே.மணி சால்வை அணிவிக்க, தமிழ்க்குமரன் மறுபக்கம் மாலை அணிவித்து கெளரவம் செய்தனர்.
#JasonSanjay at wedding reception of PMK Honorary President G.K. Manipic.twitter.com/6KiS9thck7
— Movie Tamil (@MovieTamil4) February 25, 2025
விஜய்யின் மகனின் அரிதான இந்த பொதுவெளி தோற்றம் நிகழ்வில் கலந்து கொண்டவர்களிடமிருந்தும், சமூக ஊடக பயனர்களிடமிருந்தும் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றது. இதனை வைத்து நெட்டிசன்கள் ஜேசன் சஞ்சய் அப்படியே அவங்க அப்பாவை போலவே இருக்கிறார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, ஜி.கே.மணி இல்ல திருமண நிகழ்வில் ஜேசன் விஜய் கலந்து கொள்ள வந்ததை குறிப்பிட்டு, சிலர் விஜய்க்கு பதிலாக வந்துள்ளாரா என்றும் சிலாகித்தனர். ஆனால், லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை ஜேசன் சஞ்சய் இயக்குகிறார். லைகா நிறுவன முக்கிய நிர்வாகியாக உள்ள தமிழ்குமரன் அழைப்பின் பெயரில் ஜேசன் விஜய் வந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025