விஜய்க்கு பிடித்த ‘எண் 4’? இன்று கட்சிக்கொடி அறிமுகம் செய்ய காரணம் இது தான்!
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கொடியை எதற்காகக் இன்று விஜய் அறிமுகம் செய்தார் என்பதற்கான தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கட்சிக்கொடி அறிமுகம்?
சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆக 22 தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியைக் கட்சி தலைவர் விஜய் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். கட்சிக்கொடியில் மேலும், கீழும் சிவப்பு நிறத்திலும், நடுவில் மஞ்சள் நிறத்திலும் இருந்தது.அத்துடன் , நடுவில் வாகைப்பூவும் அதனைச் சுற்றி 28 நட்சதரிங்களும் வட்ட வடிவிலும்அந்த வாகைப் பூவின் இரு பக்கத்திலும் போர் யானைகள் இருந்தது.
விஜய்க்கு பிடித்த எண் 4
இன்று விஜய்யைத் தனது கட்சிக்கொடியை அறிமுகம் செய்யக் காரணம் ஒன்று இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. அது என்னவென்றால், விஜய்க்குப் பிடித்த எண் 4, இன்று தேதி 22 எனவே, இதனுடைய கூட்டுத்தொகை (4), அதைப்போலக் கட்சிக்கொடியை அறிமுகம் செய்ய விஜய் வந்த காரின் எண் ‘1111’ இதனுடைய கூட்டுத்தொகையும் 4, அதைபோல் விஜயின் பிறந்த நாள் 22 இதனுடைய கூட்டுத்தொகை (4), விஜய்க்கு 4 என்றால் மிகவும் பிடித்த என் என்ற காரணத்தால் அவர் தனது கட்சிக்கொடியை இன்று அறிமுகம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கட்சிக்கொடியில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன?
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கொடியில் இரண்டு போர் யானைகள் மற்றும் வாகைப்பூவும் இருப்பது எதற்காக என இணையதள வாசிகள் இப்போதே ஆராயத் தொடங்கிவிட்டார்கள். வாகைப்பூ என்றால் வெற்றியைக் குறிக்கும். குறிப்பாகப் போர்களில் வெற்றிபெறுபவர்களுக்கு வாகைப்பூ மாலை சுடுவார்கள்.
எனவே, வெற்றியைக் குறிப்பிட்டுத் தான் விஜய் தனது கட்சிக் கொடியில் வைத்திருக்கிறார் எனவும் தகவல்கள் கிளம்பத் தொடங்கிவிட்டது. விழாவில் கலந்துகொண்டபோது விஜய்யும், “புயலுக்குப் பின் அமைதி மாதிரி, நம் கொடிக்குப் பின்னாலும் ஒரு வரலாறு உள்ளது. அதனை நான் மாநாட்டில் விளக்கமாகத் தெரிவிக்கிறேன்” எனப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.