விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது…! வதந்திகளை நம்ப வேண்டாம்…! – தேமுதிக
விஜயகாந்த் சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் வீடு திரும்புவார். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிகாலை 3 மணியளவில், உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜயகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. வழக்கமான பரிசோதனைகளுக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் வீடு திரும்புவார். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்” என தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.