தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.இதனிடையே தேமுதிக கடந்த மக்களவை தேர்தலில் இருந்து அதிமுக கூட்டணியில் இருந்து வருகிறது. ஆனால் வருகின்ற சட்டசபைத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்ற கேள்வி எழுந்து வருகின்றது.
இது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறுகையில் , தற்போது வரை அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக இருக்கிறது.ஜனவரி மாதம் தேமுதிகவின் பொதுக்குழு, செயற்குழு நடந்த பிறகு சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என்று கூறினார்.இந்நிலையில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 13-ஆம் தெத்து ), காலை 10.30 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கூட்டத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்து ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.
வாஷிங்டன் : OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன், ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுடன் பயனர்கள் தொடர்பு…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.…
கோவை : கோவையில் வரும் 26, 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் காலை 10 மணி…
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…