இன்று கும்மிடிப்பூண்டியில் தேமுதிக வேட்பாளர் டில்லியை ஆதரித்து விஜயகாந்த் பரப்புரையில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி எண்ணப்படுகிறது. இந்த தேர்தலில் அதிமுக , திமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதால் 5 முனை போட்டி நிலவிவருகிறது.
தேர்தல் தேதி நெருங்குவதால் அனைத்து கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். என் இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக அமமுக கூட்டணியில் இணைந்து 60 இடங்களில் போட்டியிடுகிறது.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடவில்லை என தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அமமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் பரப்புரையில் ஈடுபடுவார் என கூறப்பட்டது. அதன்படி, இன்று கும்மிடிப்பூண்டியில் தேமுதிக வேட்பாளர் டில்லியை ஆதரித்து விஜயகாந்த் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது, விஜயகாந்த் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றாமல் கைகளை மட்டுமே அசைத்தார். இது தேமுதிக தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றத்தை கொடுத்தது. வருகின்ற தேர்தலில் விஜயகாந்த் போட்டியிடவில்லை என்றாலும், அதேநேரத்தில் முதல் முறையாக தேமுதிக பொருளாளரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
முதல் முறையாக தேர்தலில் விஜயகாந்த் போட்டியிடும்போது விருத்தாசலம் தொகுதியில் தான் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…