#BREAKING: தேர்தல் பரப்புரையை துவங்கிய விஜயகாந்த்..,ஏமாற்றத்தில் தொண்டர்கள்..!

Default Image

இன்று  கும்மிடிப்பூண்டியில் தேமுதிக வேட்பாளர் டில்லியை ஆதரித்து விஜயகாந்த் பரப்புரையில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி எண்ணப்படுகிறது. இந்த தேர்தலில் அதிமுக , திமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதால் 5 முனை போட்டி நிலவிவருகிறது.

தேர்தல் தேதி நெருங்குவதால் அனைத்து கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். என் இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக அமமுக கூட்டணியில் இணைந்து 60 இடங்களில் போட்டியிடுகிறது.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடவில்லை என தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அமமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் பரப்புரையில் ஈடுபடுவார் என கூறப்பட்டது. அதன்படி, இன்று  கும்மிடிப்பூண்டியில் தேமுதிக வேட்பாளர் டில்லியை ஆதரித்து விஜயகாந்த் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது, விஜயகாந்த் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றாமல் கைகளை மட்டுமே அசைத்தார். இது தேமுதிக தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றத்தை கொடுத்தது. வருகின்ற தேர்தலில் விஜயகாந்த் போட்டியிடவில்லை என்றாலும், அதேநேரத்தில் முதல் முறையாக தேமுதிக பொருளாளரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

முதல் முறையாக தேர்தலில் விஜயகாந்த் போட்டியிடும்போது விருத்தாசலம் தொகுதியில் தான் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்