கொரோனாவிலிருந்து பூரண சுகம் அடைந்த விஜயகாந்த் – தேமுதிக தலைமை கழகம்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கொரோனாவிலிருந்து தேமுதிக தலைவர் பூரண சுகம் அடைந்துள்ளதாக தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் தமிழகத்திலும் தீவிரம் அடைந்து கொண்டேதான் செல்கிறது. இந்நிலையில் சாதாரண மக்கள் முதல், அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் என ஒருவரை விட்டு வைக்காமல் கொரானாவின் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு லேசான கொரோனா அறிகுறி இருப்பதாக நேற்று செய்திகள் வெளியாகியது.
இதனை தொடர்ந்து தற்போது தேமுதிக தலைமை கழகம் சார்பில் வெளியிட்டுள்ள ட்விட்டர் அறிவிப்பில், ஆறு மாதத்திற்கு ஒரு முறை வழக்கமாக மருத்துவ பரிசோதனை செய்வது போல தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அதில் லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் உடனடியாக அது சரி செய்யப்பட்டு விட்டதாகவும், தற்போது பூரண சுகமடைந்து நலமாக உள்ளார் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த பதிவு,
— Vijayakant (@iVijayakant) September 24, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
தலைவா வா., தலைவா! ரோஹித் ஓகே! விராட்? மோசமான ஃபர்ம்-க்கு பதிலடி கொடுப்பாரா ‘கிங்’ கோலி?
February 12, 2025![Rohit sharma - Virat kohli](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Rohit-sharma-Virat-kohli.webp)
பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! ஆந்திரா ஐடி-யில் இனி ‘ஒர்க் ஃபர்ம் ஹோம்’? முதலமைச்சர் திட்டம்!
February 12, 2025![Andhra Pradesh CM N Chandrababu naidu](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Andhra-Pradesh-CM-N-Chandrababu-naidu.webp)