விஜயகாந்த்க்கு 22-ஆம் தேதியே கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனை அறிக்கை
தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த்க்கு 22-ஆம் தேதியே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு லேசான கொரோனா அறிகுறி இருப்பதாக நேற்று செய்திகள் வெளியாகியது.எனவே தேமுதிக சார்பில் வெளியிட்ட அறிக்கையில், ஆறு மாதத்திற்கு ஒரு முறை வழக்கமாக மருத்துவ பரிசோதனை செய்வது போல தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அதில் லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் உடனடியாக அது சரி செய்யப்பட்டு விட்டதாகவும், தற்போது பூரண சுகமடைந்து நலமாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
— Vijayakant (@iVijayakant) September 24, 2020
இந்நிலையில் மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த்க்கு 22-ஆம் தேதியே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.தற்போது அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. அவர் கூடிய விரைவில் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த்க்கு 22-ஆம் தேதியே கொரோனா தொற்று உறுதி-மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை. @iVijayakant | #coronavirus pic.twitter.com/vVIEM6PrZT
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) September 24, 2020