அமைச்சர் விஜயபாஸ்கரின் கோரிக்கைக்கு அவசியமில்லை! உயர்நீதிமன்றம் உத்தரவு!
- 2017 ஆம் ஆண்டு அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறையினரின் மறு மதிப்பீடு தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
- இதில் அமைச்சர் விஜயபாஸ்கரின் கோரிக்கையை மறுத்து வருமான வரித்துறையினர் அறிக்கையை ஏற்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் வீட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது 2011 – 12 ஆண்டு முதல் 2018 – 19 ஆண்டு வரை உள்ள வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டது. அப்போது 12 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த 12 பேரில் 5 பேரிடம் மட்டுமே விஜயபாஸ்கர் தரப்பு குறுக்கு விசாரணை செய்ய வருமான வரித்துறை அணை அனுமதித்ததாக கூறப்படுகிறது. மீதமுள்ள 7 பேரிடம் குறுக்கு விசாரணை செய்ய வருமான வரித்துறையினர் அனுமதிக்கவில்லை என கூறப்பட்டு, அவர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் விஜயபாஸ்கர் தரப்பு மனு அளித்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், விசாரிக்கையில் விஜயபாஸ்கர் தரப்பானது வருமான வரித்துறையினர் கூறிய 12 சாட்சியங்களில் 7 பேரிடம் விசாரிக்க அனுமதி வேண்டும் எனவும், சேகர் ரெட்டி, சீனிவாசலு, மாதவ் ராவ் உள்ளிட்ட 7 பேரிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.
இது குறித்து பதிலளித்த வருமான வரித்துறை, விஜயபாஸ்கர் தரப்பு கூறிய 7 பேரில் 2 பேரிடம் ஏற்கனவே குறித்து விஜயபாஸ்கர் தரப்பு குறுக்கு விசாரணை செய்துள்ளது. எனவும், சேகர் ரெட்டி, மாதவராவ், வெங்கடேசன் ஆகியோரிடம் தாங்கள் எந்தவித விசாரணையும் செய்யவில்லை. அவர்களிடம் எழுத்துப்பூர்வ அறிக்கை எதுவும் வாங்கவில்லை எனவே அவர்களிடம் விஜயபாஸ்கர் தரப்பு குறுக்கு விசாரணை செய்ய தேவையில்லை எனவும் கூறப்பட்டது.
இதற்கு விஜயபாஸ்கர் தரப்பினர், சேகர் ரெட்டி அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் ஆவணங்களின் நகலை வருமான வரித்துறை தங்களுக்கு தருமாறு கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, வருமான வரித்துறையினர் அறிக்கையை ஏற்று விஜயபாஸ்கரின் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.