விஜயதரணியின் ராஜினாமா கடிதம் ஏற்பு! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
பாஜகவில் இணைந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணியின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதாரணி டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் பாஜகவில் இணைந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக விஜயதரணி அறிவித்தார். இந்த நிலையில், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணியின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
Read More – தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்..!
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ”விஜயதரணியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டேன். விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளது என அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இதனிடையில் விளவங்கோடு தொகுதி காலி என அறிவிக்கப்பட்டால், மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும்.