காங்கிரஸில் இருந்து விலகிய விஜயதரணிக்கு பாஜகவிலும் சீட் இல்லை!

Vijayadharani

Vijayadharani: தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸில் இருந்து விலகிய விஜயதரணிக்கு பாஜகவிலும் சீட் மறுக்கப்பட்டுள்ளது. விளவங்கோடு தொகுதியில் எம்எல்ஏவாக மூன்று முறை பதவி வகித்து வந்த விஜயதரணி, காங்கிரஸ் கட்சியின் மீதான அதிருப்தி காரணமாக சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் டெல்லியில் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்திருந்தார்.

Read More – மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி!

காங்கிரஸில் சீட் பிரச்சனை காரணமாக பாஜகவில் இருந்ததாக கூறப்பட்டது. இதனால் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதரணி தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். இதனால், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுடன் சேர்த்து விளவங்கோடு தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

Read More – விருதுநகரில் களமிறங்கும் விஜயகாந்த் மகன்.. தேமுதிக வேட்பாளர் லிஸ்ட்….

இந்த சூழலில் மக்களவை தேர்தலுக்கும், விளவங்கோடு தொகுதிக்குமான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது . அதில், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன், எல் முருகன், தமிழிசை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. இதுபோன்று, விளவங்கோடு இடைத்தேர்தலில் பாஜக சார்பில் விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிட நந்தினி என்பவரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Read More – பாஜக வேட்பாளராக ராதிகா, ஜான் பாண்டியன்.. வெளியான அடுத்த லிஸ்ட்…

முதலில் கன்னியாகுமரி தொகுதியில் விஜயதரணி பெயரும் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொன் ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஏனென்றால், கன்னியாகுமரி தொகுதியை விஜயதரணி கேட்டு வந்ததாக தகவல் வெளியானது. ஆனால், மறுக்கப்பட்ட நிலையில், சரி விளவங்கோடு வேட்பாளராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிலும் நந்தினி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் விஜயதரணி ஆதரவாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்