கன்னியாகுமரி மாவட்டம் விளவங்காடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதாரணி, கடந்த சனிக்கிழமை அன்று தன்னை காங்கிரஸில் இருந்து விலக்கி, பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார்.
டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார் விஜயதரணி. அதனை அடுத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எழுதிய கடிதத்தில், தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகவும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாகவும் அதில் கேட்டுக்கொண்டார். அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சியும் இவரை கட்சியில் இருந்து நீக்கியதாக அறிவித்தது.
இப்படியான பரபரப்பான சூழலில் நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயதாரணி, தான் ஏன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தேன் என்ற காரணத்தை வெளிப்படையாக கூறினார்.
தனக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதை வெளிப்படையாக கூறினார். தான் 37 வருடமாக கட்சியில் இருப்பதாகவும், கடந்து இரண்டு வாரமாக பாஜகவில் இணைய உள்ள செய்தி வருகிறது. ஆனால் அவர்கள் என்னை தொடர்பு கொள்ளவில்லை என்று கூறினார்.
ஒரு பெண் என்பதாலேயே பதவி கொடுக்க மறுக்கின்றனர் என்றும், நான் இரண்டு வாரமாக பாஜகவில் சேரப் போவதாக செய்திகள் வருகிறது, ஆனால் இந்த இரண்டு வாரமும் என்னிடம் யாரும் தொலைபேசியில் பேசவில்லை. சட்டசபையில் மக்கள் பிரச்சனையை பேச நான் முயற்சி செய்வேன் ஆனால் சபாநாயகர் பேச அனுமதிப்பதில்லை. கடுமையாக போராடினால் தான் சட்டசபையில் பேசுவதற்கு அனுமதி கிடைக்கும்.
நான் எந்த நேரத்திலும் பிரதமரை விமர்சித்து பேசியது இல்லை. காங்கிரஸை ஆதரித்து பேசியுள்ளேன். அந்த நேரத்தில் என்ன நிலைப்பாடு இருக்கிறதோ அதனை அதனை நான் பேசியுள்ளேன். தப்பு எங்கு நடந்தாலும் தட்டி கேட்க தயங்கியதில்லை.
பாஜகவில் மக்கள் தளத்தில் பணியாற்ற எனக்கு அனுமதி தருவார்கள். வரும் தேர்தலில் எனது பொறுப்புகள் பணிகள் குறித்து பாஜக தலைவர் தான் அறிவிக்க வேண்டும்.
இத்தனை நாளில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக கூட இருக்க முடியாது நிலைக்கு தான் உள்ளாக்கி உள்ளார்கள். காங்கிரஸ் அழிவுப்பாதையை நோக்கி செல்கிறது என்பதை சீமான் ஒத்துக்கிட்டார் அது உண்மை தான்.
பாஜக தேசிய மகளிர் அணி மைலா மோர்ச்சோ தலைவராக பாஜகவில் வானதி சீனிவாசன் இருக்கிறார். ஆனால் காங்கிரஸில் அந்த பதவிக்கு நான் என்னை பரிந்துரை செய்த போது. இந்தி தெரிந்த ஒருவர் தான் நாங்கள் பரிந்துரைப்போம் என்று காங்கிரஸ் தலைமை கூறுகிறது. இதுதான் அங்குள்ள நிலைமை என்று மிகவும் வெளிப்படையாக தனது குற்றச்சாட்டை முன் வைத்தார் தற்போதைய பாஜக பிரமுகர் விஜயதரணி.
தனது கட்சி பதவியை ராஜினாமா செய்த விஜயதாரணி மீது கட்சி தாவல் சட்டம் பாய்வதற்கு முன்னர், தனது எம்எல்ஏ பதவியை விஜயதாரணி ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை தமிழக சபாநாயகர் அப்பாவுவிடம் அளித்துள்ளார். இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு பேசுகையில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…