நிஜத்தில் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன்…!விஜயால் வார்டு மெம்பராகக் கூட ஆக முடியாது…!தனியரசு தாக்கு

Default Image

விஜயால் வார்டு மெம்பராகக் கூட ஆக முடியாது” என்று கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு தெரிவித்துள்ளார்.
முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் படத்தில் தளபதி விஜய் நடித்துள்ளார்.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில்  அக்டோபர் 2 ஆம் தேதி மாலை நடைபெற்றது .இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், கலாநிதிமாறன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். ஏற்கனவே ரகுமான் இசையமைத்து வெளியிடப்பட்ட 2 பாடல்களும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. டிஜிட்டல் தொழில்நுட்பமுறையில், அதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இணையதளமான www.sarkar.sunpicturs.in மூலம், விழாவில் கூடியிருந்த விஜய் ரசிகர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த மொபைல்போன்களின் மூலம் அனைத்து பாடல்களையும், விஜய் ரசிகர்கள் தங்களது கைகளால் வெளியிட்டனர்.
Image result for விஜய்

பின்னர் சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் கற்பனை கேள்விகளை தொகுப்பாளரான நடிகர் பிரசன்னா கேட்டார் .அதற்கு பதில் அளித்த நடிகர் விஜய்,சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை, நிஜத்தில் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன்.மாநிலத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை.மேலிருக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் நல்லவர்களாக இருந்தால், மாநிலம் தானாகவே நல்லதாக இருக்கும்.நான் முதல்வரானால் ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுப்பேன் ; ஆனால் முடியுமா என தெரியவில்லை.நெருக்கடி ஏற்பட்டால் இயற்கையாக நல்ல தலைவர்கள் உருவாவார்கள்.அவர்கள் அமைப்பார்கள் நல்ல சர்க்கார் என்று அதிரடியாக பேசினார்.
Image result for தனியரசு

இந்நிலையில் நடிகர் விஜய் பேச்சுக்கு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,நடிகர் விஜயால் வார்டு மெம்பராகக் கூட ஆக முடியாது” என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்