கேப்டனை கேவலப்படுத்துகிறீர்கள்.. வன்மம் வேண்டாம்.! பிரேமலதா விஜகாந்த் ஆவேசம்.!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த சில வருடங்களாகவே வெளியுலகிற்கு வராமல் வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டி இருந்த நிலையில், நவம்பர் 18ஆம் தேதி சென்னை மனப்பாக்கத்தில் உள்ள மியாட் (MIOT) மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அதன் பிறகு அவருக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. அந்த சிகிச்சை குறித்தும், விஜயகாந்த் உடல் நிலை குறித்தும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவ்வப்போது கூறி வந்தார். இருந்தும் சில சமூக வலைதள பக்கங்களில் இருந்து தவறான தகவல்களும் பரவின. இதனை அவ்வப்போது பிரேமலதா விஜயகாந்த் மறுத்துவந்தார்.
மறைந்தும் மனதில் வாழும் மயில்சாமி…நினைவுகூர்ந்த சாலிகிராம மக்கள்.!
இந்நிலையில் நேற்று சென்னை கோடம்பாக்கம் பகுதி ரங்கராஜபுரத்தில் மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், விஜயகாந்த் உடல் நிலை குறித்தும் கூறினார். அவர் கூறுகையில், கேப்டன் நன்றாக இருக்கிறார். அவரது உடல் நிலை குறித்து நாங்கள் தெளிவாக சொல்லிக்கொண்டே இருக்கிறோம்.
இருந்தும் ஏன் சிலர் திட்டமிட்டு வதந்தியை பரப்புகிறீர்கள். கேப்டன் எப்படி இருக்கிறார் என எங்களிடம் கேளுங்கள். நாங்கள் கூறுகிறோம். கேப்டன் சீக்கிரம் வீட்டுக்கு வரப்போகிறார். இப்படி இருக்கும்போது சமூக வலைதளத்தில் குறிப்பாக யூடியூப் சேனல்களில் வரும் பொய்யான வதந்திகள் காரணமாக எங்கள் மனது வருத்தமடைகிறது. எங்கள் மகன்களுக்கு திருமணம் கூட செய்து வைத்து விட்டார்கள். இவர்கள் கேப்டனை எவ்வளது தூரம் கேவலப்படுத்தணுமோ அவ்வளவு கேவலப்படுத்துகிறீர்கள்.
கேப்டன் உடல் நிலை பற்றி நான் சில தினங்கள் முன்னர் அந்த புகைப்படம் பதிவிட வேண்டிய அவசியமில்லை. இருந்தும் நான் அதனை பதிவு செய்தேன். ரஜினி சார் சொல்வது போல, ‘ குறைக்கிற நாயும், குறை சொல்லும் வாயும் குறை மட்டும் தான் சொல்லிக்கொண்டு இருக்கும்.’ என கூறிவிட்டு, கேப்டன் ஓரிரு நாளில் வீட்டுக்கு வருவார். அவர் வரும்போது உங்களிடம் நாங்களே கூறுவோம் என கூறினார்.