விஜயகாந்துடன் திடீர் சந்திப்பு!!திருநாவுக்கரசர்,ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் !!கலங்கிய அமைச்சர்!!

Published by
Venu
  • திருநாவுக்கரசர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலன் குறித்து விசாரிக்க அவரது இல்லத்தில் சந்தித்தார்.
  • விஜயகாந்துடனான சந்திப்பு குறித்து திருநாவுக்கரசர் அல்லது ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும் அதிமுக – பாஜக  இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன் பின் பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.

 

நேற்று முன்தினம்  மத்திய அமைச்சரும் தமிழக பாஜகவின் பொறுப்பாளருமான பியூஸ்கோயல் அதிமுக + பாஜக+ பாமக  உடனான கூட்டணியை இறுதி செய்த பின்பு தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழக பொது செயலாளர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.அப்போது விஜயகாந்தின் உடல்நிலையை விசாரித்ததாக பேட்டியளித்து விட்டு சென்றார்.ஆனால் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறியே நீடித்து வருகிறது.

கடலூர் ,கள்ளக்குறிச்சி,தருமபுரி, ஆரணி, சிதம்பரம்,கிருஷ்ணகிரி, அரக்கோணம் ஆகிய தொகுதிகளை  அ.தி.மு.கவிடம் பாமக கேட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

Image result for விஜயகாந்த்

அதேபோல்  கடலூர்,கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, அரக்கோணம் ஆகியவற்றை தேமுதிகவும் கேட்பதாலேயே தொகுதி பங்கீடு முடியாமல் இழுபறி  நீடிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

பாமகவிற்கு இணையாக தேமுதிக தொகுதிகள் கேட்பதால் கூட்டணியில் சிக்கல் நீடிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலன் குறித்து விசாரிக்க அவரது இல்லத்தில் சந்தித்தார். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்தது  அதிமுக கூட்டணி கட்சிகளிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதன் பின்னர் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்தேன். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது  எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

அதேபோல்  தேர்தல் நேரத்தில் சந்திக்கும்போது அரசியல் குறித்து பேசாமல் இருக்க முடியுமா? அரசியல் ரீதியாக பேசினோம்.நாட்டு நலனுக்கேற்ற வகையில் நல்ல முடிவு எடுக்க வேண்டுமென விஜயகாந்த்திடம் வலியுறுத்தினேன் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

இந்நிலையில் சந்திப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,விஜயகாந்துடனான சந்திப்பு குறித்து திருநாவுக்கரசர் அல்லது ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்.அதிமுக கூட்டணியில் இன்னும் பல்வேறு கட்சிகள் இணைய உள்ளன.அதிமுக கூட்டணியில் தேமுதிக நிச்சயம் இணையும் என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

தென்னிந்தியாவின் பெருமை., தூத்துக்குடியில் முதல் ஐடி பார்க்! மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…

6 hours ago

சரித்திரத்தில் பெயர் பதித்த நிதிஷ்குமார் ரெட்டி! மெல்போர்ன் மைதானம் அளித்த கௌரவம்!

மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…

7 hours ago

சின்சான்ஜி கிறிஸ்தவ சபை 115வது பட்டமளிப்பு விழா : ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பட்டம் பெற்றனர்!

தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…

9 hours ago

முகுந்தன் விவகாரம்., ” அது எங்கள் உட்கட்சி பிரச்சனை., நீங்கள் பேச வேண்டாம்! ” அன்புமணி காட்டம்!

விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…

9 hours ago

டிராவை நோக்கி ‘பாக்சிங் டே’ டெஸ்ட்! விட்டுக்கொடுக்காத ஆஸ்திரேலியா., திணறும் இந்தியா!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…

10 hours ago

புதுச்சேரியில் ரூ.2 ஏற்றம் காணும் பெட்ரோல், டீசல் விலை! எந்த பகுதியில் எவ்வளவு? விவரம் இதோ…

புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…

11 hours ago