மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.
பின் மத்திய அமைச்சரும் தமிழக பாஜகவின் பொறுப்பாளருமான பியூஸ்கோயல் அதிமுக + பாஜக+ பாமக உடனான கூட்டணியை இறுதி செய்த பின்பு தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழக பொது செயலாளர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.அப்போது விஜயகாந்தின் உடல்நிலையை விசாரித்ததாக பேட்டியளித்து விட்டு சென்றார்.
பின் நேற்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலன் குறித்து விசாரிக்க அவரது இல்லத்தில் சந்தித்தார்.
இதன் பின்னர் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், தேர்தல் நேரத்தில் சந்திக்கும்போது அரசியல் குறித்து பேசாமல் இருக்க முடியுமா? அரசியல் ரீதியாக பேசினோம்.நாட்டு நலனுக்கேற்ற வகையில் நல்ல முடிவு எடுக்க வேண்டுமென விஜயகாந்த்திடம் வலியுறுத்தினேன் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
இதேபோல் இன்று இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார்.இதன் பின்னர் நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில்,நல்ல நண்பர், உடல் நலம் குறித்து விசாரிக்கவே வந்தேன், துளியும் அரசியல் இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்திக்கிறார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார்.அப்போது விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்.
இதன் பின்னர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறுகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நலம் குறித்து விசாரிக்க மட்டும் தான் வந்தேன். விஜயகாந்த் எனது நீண்ட கால நண்பர்.அரசியல் குறித்து பேசவரவில்லை.கலைஞர் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர் விஜயகாந்த் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.
கடலூர் ,கள்ளக்குறிச்சி,தருமபுரி, ஆரணி, சிதம்பரம்,கிருஷ்ணகிரி, அரக்கோணம் ஆகிய தொகுதிகளை அ.தி.மு.கவிடம் பாமக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகிவருகிறது.
அதேபோல் கடலூர்,கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, அரக்கோணம் ஆகியவற்றை தேமுதிகவும் கேட்பதாலேயே தொகுதி பங்கீடு முடியாமல் இழுபறி நீடிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.பாமகவிற்கு இணையாக தேமுதிக தொகுதிகள் கேட்பதால் கூட்டணியில் சிக்கல் நீடிப்பதாக தகவல் வெளியாகிவருகிறது.
ஆனால் தமிழக பாஜகவின் பொறுப்பாளர் பியூஸ் கோயல் ,தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர்,ரஜினிகாந்த,திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து சந்தித்ததே வருகின்றனர்.
இந்த சந்திப்புகள் அனைத்தும் அரசியலில் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் இறுதியாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான் கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று தேமுதிக தெரிவித்த நிலையில்,அவரது அறிவிப்பு இந்த தேர்தலில் மிகவும் முக்கியமான அறிவிப்பாக இருக்கும்.எனவே தேமுதிக அதிமுக + பாஜக+ பாமக கூட்டணிக்கு செல்லுமா ?இல்லை திமுக கூட்டணிக்கு செல்லுமா? என்பது இனிதான் தெரியும்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…