ஜெயலலிதாவை எதிர்த்து சட்டப்பேரவையில் மக்களுக்காக குரல் கொடுத்தவர் விஜயகாந்த்- பிரேமலதா

Published by
Venu
  • அதிமுக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது .
  • தனித்து போட்டியிட தேமுதிகவுக்கு பயமில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் பாமக-பாஜக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது.

அதில் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.

ஆனால் அதிமுக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது .

அதேபோல் விஜயகாந்த் தலைமையில் தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வந்தது.ஆனால் அதில் எந்த ஒரு இறுதி முடிவும் எட்டப்படவில்லை.
Image result for vijayakanth

அதேபோல்  பிரதமர் நரேந்திர மோடி  கடந்த மார்ச் 06-ஆம் தேதி  சென்னையில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த விழாவின் மேடையில் அதிமுக  கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால் அன்றும் தேமுதிக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்று …ஆனால் அதில் இறுதி முடிவு எடுக்காமல் உள்ளது.

அதேவேளையில்  பிரதமர் மோடி கலந்து கொள்ளும் விழா மேடையில் விஜயகாந்தின் படம் வைக்கப்பட்ட பேனர் வைக்கப்பட்டது.பின்னர் அது நீக்கப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம்  தேமுதிக மூத்த நிர்வாகிகள் சிலர் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்தனர். முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன், இளங்கோவன் உள்ளிட்டோர் துரைமுருகன் வீட்டுக்கு சென்று சந்தித்தனர்.

இதன் பின்னர் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில்,எங்களிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தே.மு.தி.க நிர்வாகிகள் வந்தனர்.எங்களிடம் கொடுக்க தொகுதி இல்லை என்று தெரிவித்தேன்.அதிமுக உடனான தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏதோ தவறு உள்ளது.

தேமுதிக கூட்டணி குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  முடிவு செய்வார். தேமுதிக தொடர்ந்து முயற்சி செய்தால் பரிசீலனை செய்யப்படும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

 

இந்நிலையில் நேற்று  கூட்டணி தொடர்பாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விளக்கம் அளித்தார்.அதில் மக்களவை தேர்தலில் தேமுதிக நிலைப்பாடு குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை,குழப்பமுமில்லை.அரசியல் ரீதியாக தேமுதிகவை திமுக பழிவாங்குகிறது.திமுக, அதிமுக என இரு தரப்பினரிடமும் தேமுதிக பேசியதாக எழுப்பப்படும் கேள்வியே தவறானது.கலைஞர் உடல்நலம் இல்லாத போது சந்திக்க விஜயகாந்த் அனுமதி கேட்டார். ஆனால் ஸ்டாலின் அனுமதி கொடுக்கவில்லை. .தேமுதிகவை தொடர்ந்து பழிவாங்கும் நோக்கத்தோடு திமுக செயல்பட்டு வருகிறது.துரைமுருகன் பேசியது வெட்கக்கேடானது. உட்கார்ந்த இடத்திலிருந்து அவர் தூங்குவார் என்று கேள்விப்பட்டிருக்கேன். அதற்காக இப்படியா உளற வேண்டியது. திமுக என்றாலே “தில்லுமுல்லு கட்சி” என்று அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.

எதிரியாக இருந்தாலும் வரவேற்பதுதான் தமிழர் பண்பாடு .துரைமுருகன் நடந்து கொண்டது சரியில்லை.

தேமுதிக கொள்கையில் உறுதியாக உள்ளது, நாடாளுமன்ற தேர்தல் என்பதால் ஏதேனும் ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்து ஆக வேண்டும் .கடந்த தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற்ற அதிமுக எம்.பி.க்களால் தமிழகத்திற்கு என்ன பலன் கிடைத்தது.

கூட்டணி குறித்து விஜயகாந்த் மற்றும் நிர்வாகிகள் முடிவு செய்வார்கள்.கட்சி மீது விமர்சனம் வைப்பதால், கூட்டணி வைக்க மாட்டோம் என அர்த்தமில்லை.ஜெயலலிதாவை எதிர்த்து சட்டப்பேரவையில் மக்களுக்காக குரல் கொடுத்தவர் விஜயகாந்த். அதிமுக ஆட்சி தொடர தேமுதிக கூட்டணி வைத்தது தான் காரணம்.தனித்து போட்டியிட தேமுதிகவுக்கு பயமில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விளக்கம் அளித்தார்.

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

6 mins ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

17 mins ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

39 mins ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

41 mins ago

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

58 mins ago

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

1 hour ago