தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று தமிழ்நாடு திரும்பி வந்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.அரசியலில் அவ்வப்போதுதான் தான் தனது முகத்தை வெளிக்காட்டி வருகிறார்.முக்கிய முடிவுகள் ,வாழ்த்து செய்திகள் அனைத்தும் அறிக்கை மூலமாக தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று விஜயகாந்த் சார்பாக நதிநீர் இணைப்புக்கு ஒற்றைத் தீர்ப்பாயம் மசோதா நிறைவேற்றியதை வரவேற்று அறிக்கை ஓன்று வெளியிடப்பட்டது.அந்த அறிக்கையில், மத்திய,மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்தி மழைக்காலங்களில் வரும் பெருவெள்ளம் கடலில் கலப்பதை தடுத்து,மழைநீரை சேமித்தாலே தமிழகம் செழிக்கும். அதேபோல் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீரை பகிர்ந்து அளிக்க கூடிய அளவு நதிகளை இணைத்து, நீர் நிலைகளை உயர்த்துவதற்கு நதிநீர் இணைப்பு மிக அவசியம் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
கடந்த ஜூலை 31 ஆம் தேதி மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டு தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்க முடிவு செய்யும் வகையில் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.
அதாவது நதிநீர் ஆணையங்கள் மொத்தம் 9 உள்ளது . அனைத்து ஆணையங்களையும் ஒன்றிணைத்து ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் நோக்கில் தான் இந்த மசோதாவில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
ஆனால் தவறுதலாக விஜயகாந்த் சார்பாக வெளியிட்ட அறிக்கையில் நதிநீர் இணைப்பு குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…