விஷயமே தெரியாமல் முந்திக்கொண்டு அறிக்கையை வெளியிட்ட விஜயகாந்த் !

Default Image

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை  பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று தமிழ்நாடு திரும்பி வந்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.அரசியலில் அவ்வப்போதுதான் தான் தனது முகத்தை வெளிக்காட்டி வருகிறார்.முக்கிய முடிவுகள் ,வாழ்த்து செய்திகள் அனைத்தும் அறிக்கை மூலமாக தெரிவித்து வருகிறார்.

 

இந்த நிலையில் நேற்று விஜயகாந்த் சார்பாக நதிநீர் இணைப்புக்கு ஒற்றைத் தீர்ப்பாயம் மசோதா நிறைவேற்றியதை வரவேற்று அறிக்கை ஓன்று வெளியிடப்பட்டது.அந்த அறிக்கையில்,  மத்திய,மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்தி மழைக்காலங்களில் வரும் பெருவெள்ளம் கடலில் கலப்பதை தடுத்து,மழைநீரை சேமித்தாலே தமிழகம் செழிக்கும். அதேபோல் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீரை பகிர்ந்து அளிக்க கூடிய அளவு நதிகளை இணைத்து, நீர் நிலைகளை உயர்த்துவதற்கு நதிநீர் இணைப்பு மிக அவசியம் என்று   அறிக்கை வெளியிட்டிருந்தார்.

கடந்த ஜூலை 31 ஆம் தேதி மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டு தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்க முடிவு செய்யும் வகையில் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.

அதாவது  நதிநீர் ஆணையங்கள் மொத்தம் 9 உள்ளது . அனைத்து ஆணையங்களையும் ஒன்றிணைத்து ஒரே தீர்ப்பாயம்  அமைக்கும் நோக்கில் தான் இந்த மசோதாவில்  நிறைவேற்றம் செய்யப்பட்டது.

ஆனால் தவறுதலாக விஜயகாந்த் சார்பாக வெளியிட்ட அறிக்கையில் நதிநீர் இணைப்பு குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்