அந்தமானில் சிக்கித்தவிக்கும் 300க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தேமுதிக சார்பில் செய்து தரப்பட்டுள்ளதாக விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 8க்கும் அதிகமான மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் அந்தமானில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் தமிழக மீனவர்கள் நாடு திரும்ப முடியாமல் அந்தமானில் சிக்கித் தவித்து வருகின்றனர்.மேலும் இடவசதி இன்றியும் தவித்து வருகின்றனர்.
தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை வாயிலாக செய்தி அறிந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், அந்தமானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களுக்கு உடனடியாக உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்தார்.இதையடுத்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அந்தமான் தேமுதிக செயலாளர் உதயசந்திரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீனவர்களின் நிலைமை குறித்து கேட்டறிந்தார். அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யுமாறு உதயசந்திரனிடம், பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
பின்னர் அந்தமான் தேமுதிக செயலாளர் தமிழக மீனவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து வருகிறார். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள தமிழக மீனவர்கள், விஜயகாந்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர். தங்களை மீட்டு தாயகம் அழைத்துச் செல்ல மத்திய, மாநில அரசுகளிடம் விஜயகாந்த் வலியுறுத்த வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…