தேமுதிக சார்பில் ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் -விஜயகாந்த் அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த எரித்துக் கொல்லப்பட்ட ஜெயஸ்ரீயை குடும்பத்தினருக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அவர்கள் 1 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகே சிறுமதுரை என்ற ஊரில் ஜெயபால் என்பவரின் மகள் ஜெயஸ்ரீயை அதிமுகவின் கலியபெருமாள் மற்றும் முருகன் ஆகியோர் தீவைத்து கொளுத்தினர்.பலத்த காயங்களுடன் ஜெயஸ்ரீ முண்டியப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அதிமுக நிர்வாகிகள் கலியபெருமாள் மற்றும் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறுமியின் இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.அரசியல் கட்சித் தலைவர்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்டனம் தெரிவித்தனர்.நேற்று உயிரிழந்த சிறுமி ஜெயஸ்ரீ குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில் ஜெயஸ்ரீயை குடும்பத்தினருக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் 1 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட மாணவி ஜெயஸ்ரீயை, இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு தேமுதிக சார்பில் ₹ 1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும்.#ஜெயஸ்ரீ pic.twitter.com/iHdNteWjVj
— Vijayakant (@iVijayakant) May 11, 2020