கஜா புயல் பாதிப்பு…!தேமுதிக சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் …!விஜயகாந்த் அறிவிப்பு
கஜா புயல் பாதிப்புக்கு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என்று தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை மிரட்டி சென்ற கஜா தனது கோரத்தை காண்பித்து 4 மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுழன்று சூறைக்காற்றால் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த புயல் வீடுகள்,கால்நடைகள்,மனித உயிரிகளும் மற்றும் மரங்களும் பலத்த சேதமடைந்தது.
கஜா புயலினால் டெல்டா பகுதி மக்கள் முன்பில்லாதா அளவிற்கு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள மக்கள் உணவு, தண்ணீரும் கிடைக்காமல் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்“கஜா புயல் பாதிப்புக்கு தேமுதிக சார்பில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்படும்” என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.