தே.மு.தி.க கட்சி தலைவர் விஜயகாந்த் சவால் !!!
தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி பேச்சிற்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் பதிலடி.
வேலூர் மாவட்டம் அரியூரில் கட்சி பிரமுகரின் திருமண விழாவில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி அவர்களின் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து காணாமல் போனது போல், கமலும் காணாமல் போய்விடுவார் என்ற கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது, கூடிய விரைவில் தேர்தல் வரும். அதில் தேமுதிக கட்சியினரா அல்லது அதிமுக கட்சியினரா யார் காணாமல் போவார்கள் என்று மக்களுக்கு தெரியவரும்.
காவிரி மேலாண்மை விவகாரத்தில் தமிழக அரசும், மற்ற அரசியல் கட்சிகளும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
ஆயுதப் படை காவலர் அருள் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், பணி அழுத்தத்திற்கு தற்கொலை தீர்வல்ல என்றும் மேலும் பல்வேறு கேள்விகளுக்கும் பதில் கூறினார்.
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு