அடக்கம் செய்ய நான் இடம் தருகிறேன்.! விஜயகாந்த் அதிரடி அறிக்கை.!
கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய தனது ஆண்டாள் அழகர் கல்லூரிக்கு சொந்தமான இடத்தை தருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின் உடலை கீழ்பாக்கம் மயானத்தில் அடக்கம் செய்ய ஊழியர்கள் முற்பட்டபோது, அப்பகுதி மக்கள் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இதனால், போராட்டம் நடத்திய 20 பேர் மீது 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மருத்துவரின் உடலை வேறு இடத்தில் அடக்கம் செய்தனர். இந்த நிகழ்வுக்கு மருத்துவர்கள் உட்பட பலர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் , கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய தனது ஆண்டாள் அழகர் கல்லூரிக்கு சொந்தமான இடத்தை தருவதாக அறிவித்தார். மேலும், கொரோனா பாதித்து உயிரிழந்தவரின் உடல் மூலமாக நோய் பரவாது என்பதை அரசு மக்களிடம் அறிவுறுத்த வேண்டும் எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.