“விரைவில் வீடு திரும்புவார் விஜயகாந்த்” – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், அண்மையில் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார். நேற்று இரவு அவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரின் உடல்நலம் தொடர்பாக, மியாட் மருத்துவமனையின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சீரான திட்டமிடப்பட்ட தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கதிரியக்க மதிப்பீடு செய்யப்பட்டது. விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் – மியாட் மருத்துவமனை அறிக்கை!#Vijayakanth | #DMDK pic.twitter.com/dNKJ56Wxvy
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) October 7, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025