காங்கிரஸில் இருந்து விஜயதரணி நீக்கம்!
கடந்த சில வாரங்களாகவே விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருப்பதாகவும். அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் விரைவில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. தற்போது, அதனை உறுதிப்படுத்தும் விதமாக, இன்று டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் அருண் சிங் முன்னிலையில் விஜயதரணி அக்கட்சியில் இணைந்தார்.
கடந்த 2 வாரங்களாக டெல்லியில் முகாமிட்டு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இன்று டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் விஜயதரணி. காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்தால், அக்கட்சியில் இருந்து விலகி விஜயதரணி பாஜகவில் இணைந்ததாக கூறப்பட்டது.
Read More – பிரதமர் மோடி சிறந்த தலைவர்… பாஜகவில் இணைந்த காங். எம்எல்ஏ விஜயதரணி பேச்சு.!
இந்த சூழலில் பாஜகவில் இணைந்தபின் விஜயதரணி கூறியதாவது, பல்வேறு காரணங்களுக்காக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளேன். சிறு வயது முதலே காங்கிரஸில் ஒரு அங்கமாக இருந்து வந்த நிலையில், தற்போது விலகும் சூழல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தலைமை சிறப்பாக இருப்பதால் பாஜகவில் இணைத்துள்ளேன். தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில் பாஜக வளர்ந்து வருகிறது.
பாஜக ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனவே தமிழகத்தில் பாஜகவை மேலும் பலப்படுத்தும் நோக்கில் கட்சியில் இணைந்துள்ளேன் என்றார். இந்த நிலையில், விஜயதரணி பாஜகவில் ஐக்கியமானதை தொடர்ந்து, அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்து அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் அஜய் குமார் உத்தரவிட்டார்.
ஏற்கனவே, தமிழக காங்கிரஸ் தலைமையும் விஜயதரணியை நீக்கம் செய்திருந்தது. மேலும், விஜயதரணியை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்படும் என்றும் அவரை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதனிடையே, பாஜகவில் இணைந்த விஜயதரணி, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அது தொடர்பான பதவிகளில் இருந்து ராஜினாமா செய்கிறேன் எனவும் அறிவித்திருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அது தொடர்பான பதவிகளில் இருந்து ராஜினாமா செய்கிறேன்.
I am resigning from the position of primary membership and related posts held by me in the Congress party. pic.twitter.com/8PDtXkJ9HM— Vijayadharani MLA (@VijayadharaniM) February 24, 2024