விஜயதசமி – அரசுப்பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!
விஜயதசமியான இன்று அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவு.
இன்று விஜயதசமி கொண்டாடப்படும் நிலையில், தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கம். 2018 ஆம் ஆண்டு முதல் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதால், சரஸ்வதியின் ஆசிர்வாததோடு குழந்தைகள் நன்கு கல்வி பயில்வார்கள் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டும் விஜயதசமியான இன்று அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியராவது கண்டிப்பாக பள்ளிக்கு பணிக்கு வர வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.