மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த விஜயபாஸ்கர்- பணிக்கு திரும்பாவிட்டால் காலியிடமாக அறிவிக்கப்படும்
மருத்துவர்கள் இன்றைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் காலியிடமாக அறிவிக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு ,மருத்துவர் பணியிடங்களை குறைக்க கூடாது மற்றும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மருத்துவர்கள் போராடுவதற்கு அரசு மருத்துவமனை போராட்ட களம் அல்ல .வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 4,683 மருத்துவர்களில் 1,550 மருத்துவர்கள் பணிக்கு திரும்பி விட்டனர் .போராட்டத்தை கைவிட்டு மருத்துவர்கள் இன்றைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் காலியிடமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.