நிலவரம் தெரிந்தும் அதிக விலைக்கு விற்ற கடைகள்-32க்கு சீல்! வைத்து அதிரடி

தமிழகம் முழுவதும் முகக்கவசம், கிருமி நாசினி தெளிப்பான் போன்றவற்றைவை அதிக விலைக்கு விற்றதாக 32 கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பது கவலை அளிப்பதாகவும் கொரோனா பரவலை தடுக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். தமிழகம் முழுவதும் கொரோனாவிற்கு பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி இளைஞருடன் தொடர்பில் இருந்த 163 பேர் தற்போது தனிமைப்படுப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் அயர்லாந்தில் இருந்து தமிழகம் வந்து கொரோனா தொற்றுக் கண்டறியப்பட்ட இளைஞருடன் தொடர்பில் இருந்த 94 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!
April 7, 2025
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025