தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
தருமபுரி பாலக்கோட்டில் நடைபெற்ற தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் இளைஞர் அணி செயலாளராக விஜய பிரபாகர் தேர்வு செய்யப்பட்டார்.

தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர் பதவி எல்.கே.சுதீஷுக்கும், அவைத் தலைவராக வி.இளங்கோவனும், தலைமை நிலையச் செயலாளராக ப.பார்த்தசாரதியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தருமபுரியின் பாலக்கோட்டில் நடைபெறும் நடைபெற்று வரும் அக்கட்சியின் 16-வது பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகளின் ஒருமனதாக இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.
கடலூரில் அடுத்த ஆண்டு 2026 ஜனவரி 9 ஆம் தேதி தேமுதிக மாநாடு நடைபெறும் என்று கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெயரை சென்னையில் உள்ள 100 அடி சாலைக்கு சூட்ட வேண்டும் என்ற தீர்மானமும், விஜயகாந்திற்கு பாரத் ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் தீர்மானமும் நிறைவேற்றம் செய்யப்பட்டது.