“2026ல் விஜய் முதலமைச்சர் பதவியில் அமர்வது உறுதி” புஸ்ஸி ஆனந்த் குஷி பேச்சு.!

தவெக பொதுச்செயலாளர் புதுவை ஆனந்த் தலைமையில் பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

TVK Meeting - Bussy Anand _11zon

சென்னை : விக்கிரவாண்டியில் அக். 27ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. 33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடக்கவுள்ள தவெக மாநாடு ஏற்பாடு குறித்து ஆலோசனை செய்ய தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் தலைமையில், சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

முதன் முறையாக தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியுடன் கூடிய துண்டு அணிந்து ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த், “தளபதினா… நம் தலைவர் தளபதி மட்டும் தான். காவல் துறை எத்தனை கண்டிஷன் போட்டாலும் சரி, தளபதி சொன்னா அதை செய்ய லட்சம் பேர் இருக்காங்க.

அக்.27ம் தேதி நடைபெறும் தவெகவின் முதல் மாநாட்டில் பெண்கள் தான் அதிகமாக பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாநாடு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்கிற அளவுக்கு தவெக மாநாடு நடைபெறும். மாநாட்டிற்கு மகளிர் ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதல் மாநாடு வெற்றி மாநாடாக இருக்கும் அதில் எந்த சந்தேகமும் இல்லை.

காவல்துறையின் விதிமுறைகளைப் பின்பற்றி ஒழுக்கத்துடன் இந்த மாநாடு நடைபெறும் என எதிர்பார்க்கிறேன். நம்முடைய இலக்கு 2026 தான், 2026ல் தவெக தலைவர் விஜய் தான் முதலமைச்சர்” என்று நிர்வாகி மத்தியில் உற்சகத்துடன் பேசியிருக்கிறார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “கட்சிக்காக உழைத்திருக்கிறேன் எனக்கு பதவி வேண்டும் என்று வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டால் எனக்கு கோபம் வரும். எதுவாக இருப்பினும் என்னை நேரடியாக அணுக வேண்டும். தவெக நிர்வாகிகளுக்கு என தனி அனுமதிச் சீட்டு கிடையாது, யார் வேண்டுமானாலும் தவெக மாநாட்டில் பங்கேற்கலாம்.

தவெக மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து நிர்வாகிகளும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். முக்கிய நிர்வாகிகள் வெள்ள சட்டை வெள்ளை வேட்டி அணிந்து வர வேண்டும் ” இவ்வாறு கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்