‘எடப்பாடியின் ஓட்டை படகில் விஜய் ஏற மாட்டார்’…மருது அழகுராஜ் வெளிப்படை பேச்சு!
அதிமுகவின் கட்சிக்குள்ளே இன்னும் சீக்கிரமாக ஒரு எரிமலை ஒன்று வெடிக்கத்தான் போகிறது என ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜி தெரிவித்துள்ளார்.

சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவிருக்கிறார். கட்சியின் முதல் மாநாட்டில் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசிய நிலையில் அதிமுக குறித்து பேசவில்லை. அத்துடன், ஆட்சிக்கு வந்தால் கூட்டணி கட்சிக்கும் பங்கு உண்டு எனவும் பேசியிருந்தார்.
அதிமுகவை அவர் விமர்சித்து பேசாத நிலையில், அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் சிலரும் விஜயின் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்தனர். எனவே, தேர்தலில் 2 கட்சிகளும் கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறதோ என்கிற கேள்விகளும் அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. அதற்கு எடப்பாடி பழனிசாமியும் தேர்தலுக்கு இன்னும் சில காலங்கள் இருக்கிறது அது வரும் போது அறிவிக்கப்படும் என தெரிவித்தும் இருந்தார்.
இந்த சூழலில், எடப்பாடியின் ஓட்டை படகில் விஜய் ஏறமாட்டார் என ஓபிஎஸ் ஆதரவாளரும் அவருடைய அணியின் கொள்கைப் பரப்புச் செயலாளருமான மருது அழகுராஜி சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” விஜய் கண்டிப்பாக வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடத்தான் விரும்புவார். இது தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி விஜய்யின் தவெக கட்சியுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைக்கிறது. ஆனால், விஜய் கண்டிப்பாக, எடப்பாடி உடைய ஓட்டைப் படகில் ஏறி பயணிக்கமாட்டார்.
அதிமுக வாக்குகளையும் தன்னுடைய வசபடுத்துவதற்காக தனியாக நின்று தனித்து தான் போட்டியிட முடிவெடுத்திருப்பார். அதிமுகவின் கட்சிக்குள்ளே இன்னும் சீக்கிரமாக ஒரு எரிமலை ஒன்று வெடிக்கத்தான் போகிறது. எனவே, கரையை அதிமுக கடக்கவேண்டும் என்றால் அவர்கள் பாஜகவுடன் தான் கூட்டணி அமைக்கவேண்டும்” எனவும் மருது அழகுராஜி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
டிரம்ப் அதிரடி வரி விதிப்பு.! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு! சீனா, கனடா, ஆஸ்திரேலியா, தைவான்….
April 3, 2025