சற்று நேரத்தில் மாநாட்டு மேடைக்கு விஜய் வருவார்: புஸ்ஸி ஆனந்த் தகவல்.!
சற்று நேரத்தில் மாநாட்டு மேடைக்கு கட்சி தலைவர் விஜய் வருவார்: என பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார் .

விழுப்புரம் : த.வெ.க மாநாடு பிரமாண்டமாக இன்று நடைபெறவிருக்கும் நிலையில் , இன்னும் சற்று நேரத்தில் மாநாட்டு மேடைக்கு தவெக தலைவர் விஜய் வரவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
அலைகடலென திரண்டிருக்கும் மக்கள் கூட்டத்திற்கு இடையே ராம்ப் வாக்கில் நடந்து வரவுள்ள விஜய், ரிமோட் மூலம் கொடியை ஏற்றி வைத்து மாநாட்டு நிகழ்வுகளை தொடங்குவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கொள்கை வெளியீடு, கட்சிக்கான பாடல் வெளியீடு என அடுத்தடுத்து பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதை எதிர்பார்த்து தொண்டர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர்.இதற்கு இடையே, வாகனங்களில் நீண்ட நெடிய தூரம் காத்து நிற்கும் மக்கள், வாகனங்களை வீட்டு கீழே இறங்கி, மாநாட்டு திடல் நோக்கி நடக்க ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.