திமுக கூட தான் போட்டி…விஜய் 2-வது இடத்திற்கு வருவார்! தமிழிசை பேச்சு!

தமிழகத்தில் இரட்டை இலையோடு பாஜக ஆட்சி மலரும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

tvk vijay and Tamilisai Soundararajan

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் வட்டாரம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. உதாரணமாக, மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி வைக்கிறது என அறிவித்தார். அமித்ஷா உடன் அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதனையடுத்து,தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்ததை அடுத்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து பேசி வருகிறார்கள்.  இந்த சூழலில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூட்டணி குறித்து எழுந்த விமர்சனங்கள் பற்றியும் விஜய் பேசியது குறித்தும் பேசியுள்ளார்.

சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் ” திமுக அமைத்திருப்பது தான் பொருந்தாத கூட்டணி…அதிகாரத்தை பயன்படுத்துகின்ற கூட்டணி…பாஜக அமைத்திருப்பது என்பது மக்கள் நலனுக்கான கூட்டணி. இதில் தம்பி விஜய் வேற இடையில் வருகிறார். அவர் சொல்கிறார் 2026 தேர்தலில் போட்டி என்றால் திமுகவுக்கும் அவருக்கும் தான் போட்டி என்று சொல்கிறார்.

ஆமாம் போட்டி தான் ஆனால் அவர்கள் இருவருக்கும் இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி. இரண்டாவது இடத்தை பிடிப்பதில் திமுகவுக்கும் விஜய்க்கும் இடையே போட்டி ஏற்படலாம். இதில் இரண்டாவது இடத்திற்கு விஜய் வரலாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்னும். இல்லை. ஏனென்றால், நாங்கள் முதல் இடத்திற்கு வருவோம். அதில் எந்தவீத சந்தேகமும் வேண்டாம்” எனவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.  தொடர்ந்து பேசிய அவர் ” தாமரை குளத்தில் வட்ட இலையோடு பாஜக வளரும். தமிழகத்தில் இரட்டை இலையோடு பாஜக ஆட்சி அமைக்கும். அதனை இந்த தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சபதமாகவே எடுத்துக்கொள்கிறோம்” எனவும் பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்