"யார் தளபதி"வாங்கி கட்டும் நடிகர் விஜய் ..!!

Default Image
முதலில் எம்.எல்.ஏ ஆனால் தான் முதல் அமைச்சராக முடியும் என்ற அறிவே இலாமல், படத்தில் பேசி மீந்து போன வசனங்களை மேடையில் பேசிவருவதாக, நடிகர் விஜய்க்கு திமுக மேடையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் முன்னாள் மத்திய மந்திரி முரொசலி மாறனின் மகனும் சன் நெட்வொர்க் இயக்குனருமான கலா நிதிமாறன் முன்னிலையில், நடிகர் விஜய் தான் முதல் அமைச்சர் ஆனால் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.
இதனை விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த கலாநிதி மாறன் வரவேற்பது போல சிரித்துக் கொண்டு இருந்தார். விழாவில் அனைவரும் விஜய்யை தளபதி என்று புகழ, சர்கார் பட தயாரிப்பாளரான கலாநிதிமாறனும் தளபதி என்று அழைத்தார்.
இது திமுகவினர் இடையே பலத்த ஆத்திரத்தை உண்டாக்கியது. இந்த நிலையில் திமுக மகளிரணி சார்பில் நடந்த கலைஞர் வீரவணக்க பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திராவிடர் கழக பேச்சாளர் மதிமாறன், திமுக தலைவர் ஸ்டாலினை ஏன் தளபதி என்று அழைக்கின்றோம் என்பதற்கு விளக்கம் கூறினார்
அதோடில்லாமல் முதலில் எம்.எல்.ஏ ஆனால் தான் முதல் அமைச்சராக முடியும் என்ற அறிவே இலாமல், படத்தில் பேசி மீந்து போன வசனங்களை மேடையில் பேசுவோர் எல்லாம் தளபதி ஆகிவிட முடியாது என்று நடிகர் விஜய்யை கடுமையாக சாடினார் மதிமாறன்.நடிகர் விஜய்யின் குட்டிக்கதை ரசிகர்களுக்கு பொருந்துமா என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்த நடிகர் கருணாகரனை விஜய் ரசிகர்கள் கடுமையாக மிரட்டி வரும் நிலையில், திமுக மேடையில் திராவிடர் கழக பேச்சாளர் வே. மதிமாறன், நடிகர் விஜய்யை சாடி இருப்பது குறிப்பிடதக்கது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்