கன்னியாகுமரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் எச்.வசந்தகுமாரின் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடம் காலியாகவுள்ளது. அந்த மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுடன் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதைத்தொடர்ந்து, கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவோருக்கு மார்ச் 5 வரை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட விருப்ப மனுவை சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம் தாக்கல் செய்தார்.
மேலும், மறைந்த வசந்தகுமாரின் மகனும், நடிகருமான விஜய் வசந்த் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை தாக்கல் செய்தார். இதனால், யாரை காங்கிரஸ் சார்பில் போட்டியிட காங்கிரஸ் தலைமை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
ஏற்கனவே பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…