அரசியல் கட்சி தொடங்கியதற்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
சினிமா பயணத்தில் இருந்து அரசியல் பயணத்தில் காலெடுத்து வைத்துள்ளார் நடிகர் விஜய். ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை தொடங்கியிருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
விஜய் தான் வெளியிட்ட முதல் அரசியல் அறிக்கையில், 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதே இலக்கு என்றும் குறிப்பிட்டுள்ளார் TVK கட்சி தலைவர் விஜய். நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அதன்படி, உதயநிதி ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட பலர் தங்கள் வாழ்த்துக்களை கூறி வரவேற்றனர். தற்போது, அரசியல் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துதவெக தலைவரும், நடிகருமான விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
TVK கட்சி தலைவர் விஜய்க்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார் கமல்ஹாசன்.!
அந்த அறிக்கை குறிப்பில், தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்” அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…