விஜய் தம்பி ஜி இப்படி பேசாதீங்க! தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!

த.வெ.க vs திமுக என்று விஜய் பேசியிருக்கிறார் அவர் பேசியது எதுகை மோனைக்கு சரியாக இருக்கலாம் என தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.

tamilisai soundararajan about tvk vijay

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் திமுக மற்றும் பாஜக குறித்து விமர்சனம் செய்து பேசியது என்பது இன்னும் அரசியல் வட்டாரத்தில் ஹாட்டாப்பிக்கான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அப்போது அவர் கூறுகையில், இனி தமிழக அரசியலில் ஒன்னு இந்த TVK (தமிழக வெற்றிக் கழகம்) இன்னொன்று DMK (திராவிட முன்னேற்றக் கழகம்) இந்த இரண்டு கட்சிக்கும் தான் போட்டி

உங்கள் (திமுக) சீக்ரெட் ஓனர் மாண்புமிகு மோடி ஜி அவர்களே, உங்க பேற சொல்ல எங்களுக்கு என்ன பயமா? காங்கிரஸ் கூட தேர்தல் கூட்டணி, கொள்ளையடிக்க பாஜகவுடன் மறைமுக கூட்டணி. தமிழகம் என்றாலே மத்தியில் அலர்ஜி. ஜிஎஸ்டி மட்டும் சரியாக வாங்குவீங்க. ஆனால் , நிதி தர மாட்டீங்க. மும்மொழி கொள்கையை இங்கு திணிப்பீங்க ” எனவும் வெளிப்படையாகவே விமர்சனம் செய்து விஜய் பேசியிருந்தார்.

விஜய் பேசியதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் பதிலடி கொடுக்கும் வகையில் பேசி வருகிறார்கள். அந்த வகையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜனிடம்  விஜய் பேசிய விஷயங்கள் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய அவர் ” வாழ்கை விரிவடைய விரிவடைய விஜய்க்கு சாலிகிராமத்தில் இருந்து பனையூர் தேவைப்படுகிறது. அதே மாதிரி தான் விமான நிலையத்தில் பயணிகள் அதிகரிக்க அதிகரிக்க வசதிகள் அதிகமாகும்போது மீனபாக்கத்தில் இருந்து பறந்தூர் தேவைப்படுகிறது.

த.வெ.க vs திமுக என்று விஜய் பேசியிருக்கிறார். அவர் பேசியது எதுகை மோனைக்கு சரியாக இருக்கலாம். ஆனால், எதிரில் நீங்கள் இல்லையே..களத்திலே நீங்கள் இல்லையே மோடி ஜியை பார்த்து தமிழ் நாடு மேல அக்கறை இல்லையை ஜீ என்று கேட்கிறீர்கள் இப்படி பேசுவது மிகவும் தவறான பேச்சு..கொரோனா காலத்தில் தமிழ் நாடு உட்பட பலவற்றை காப்பாற்றியது மோடி தான். விஜய் தம்பி ஜி இப்படி பேசாதீங்க ஜி.

மறைந்த முதல்வர்களான ஜெயலலிதா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகியோர் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து தான் மக்கள் பணியாற்றி அதன் பிறகு தான் முதலமைச்சர்கள் ஆனார்கள். எனவே, நீங்களும் முதலில் களத்திற்கு வாருங்கள். கனவு காண்பதை நிறுத்திவிட்டு முதலில் நீங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மீதான எதிர்ப்பை தீவிரபடுத்துங்கள். அதனைவிட்டு விட்டு சினிமா போன்று ஒரு எதிர்ப்பு சீன் வைத்துக் கொள்ளலாம், ஒரு பாட்டு சீன் வைத்துக் கொள்ளலாம், ஒரு சண்டை காட்சி வைத்துக் கொள்ளலாம் என்பது போல் இருக்காதீர்கள்” எனவும் தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்