விஜய்சேதுபதி யோசித்து முடிவெடுக்க வேண்டும்- கடம்பூர் ராஜு..!
முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது குறித்து விஜய்சேதுபதி யோசித்து முடிவெடுக்க வேண்டும் எனவும், மக்களின் உணர்வுகளை மதிக்கவேண்டிய இடத்தில் நடிகர் விஜய் சேதுபதி உள்ளார் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான “800” திரைப்படத்தில் முத்தையா முரளிதரனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர்கள் வெளியானது.
இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிராகவும், ஆதரவாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் ‘800’ படத்தில் நடிக்க வேண்டாம் என இயக்குநர்கள் பாரதிராஜா, சீனு ராமசாமி மற்றும் சேரன் உள்ளிட்ட பலர் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.