800 movie என்ற சர்ச்சைக்குரிய படத்தில் இருந்து விஜய் சேதுபதி வெளியேற வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார்.இந்த படத்திற்கு “800” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.இதில் முரளிதரன் தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி இருப்பது போல் வெளியானது. ஆனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதாவது,முரளிதரன் இலங்கை நடைபெற்ற போராட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்ற தமிழகத்தில் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர் .
இந்நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டப்பட்டுள்ள பதிவில் , 800 movie என்ற சர்ச்சைக்குரிய படத்தில் நடிக்கவேண்டாம் என்பதை ஒரு கலைஞரின் சுதந்திரத்தில் தலையிடும் போக்கு என கருதவேண்டாம்.இது கோடிக்கணக்கான தமிழர்களின் ஆறாத பெருவலி. அந்த பாத்திரத்தில் சிங்களவன் நடித்தால் யாரும் கொதிக்கப் போவதில்லை.விஜய் சேதுபதி இதை உணர்ந்துவெளியேற வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…