மெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஹிட் அடித்தது. ஐரா விருது(INTERNATION ACHIEVEMENT RECOGNITION AWARDS) என்கிற 2018 -ம் ஆண்டுக்கான பரிந்துரை பட்டியல்கள் கடந்த ஜூலை மாதம் 21 – ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் ஆகிய இரு பிரிவுகளில் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் இடம்பெற்றிருந்தார்.
இதன் பின் ஐரா விருது(INTERNATION ACHIEVEMENT RECOGNITION AWARDS) – க்கு தேர்வாகியுள்ள 4 நபர்களின் பெயரை ஐஏஆர்எ வெளியிட்டது. அதில் விஜய், பெயர் இடம்பெற்றது.
இன்று மெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று லண்டனை சேர்ந்த ஐரா விருது வழங்கும் அமைப்பு அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பின் சார்பில், மெர்சல் படத்துக்காக “சிறந்த சர்வதேச நடிகர்” என்ற விருதை வென்ற நடிகர் விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும் பல விருதுகள் பெற்று நடிகர் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரபல எழுத்தாளர் ராஜ் கௌதமன் (74) காலமானார். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கலாசார மற்றும் இலக்கிய…
வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி-25ம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார்.…
சென்னை : காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை மையம்…
சென்னை : கேரளா உட்பட 10 மாநிலங்களில் ஒரு மக்களவை (வயநாடு) மற்றும் 31 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்…
சென்னை : கடந்த வாரம் உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது கடந்த சில நாள்களாகவே குறைந்து வருகிறது. அதன்படி,…