ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குகிறார் விஜய்?

சுமார் 300 குடும்பங்களுக்கு நேரில் (பனையூர்) வரவழைத்து மழை நிவாரண உதவிகளை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Vijay Relief

சென்னை: தமிழகம், புதுவையில் கோரத் தாண்டவம் ஆடிய ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், தி.மலை வட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் மின் விநோகம் இல்லை.

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் மொத்தம் 12 மனித உயிர்களை பலி வாங்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதற்கட்ட கணக்கெடுப்பில் 69 லட்சம் குடும்பங்கள், 2,11,139 ஹெக்டேர் விவசாய நிலம், 9,576 கி.மீ சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில், விழுப்புரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக அரசு, அரசி உள்ளிட்ட நிவாரணம் பொருட்களை வழங்கி வருகின்றது. அதேபோல், சேலத்தில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த எடப்பாடி பழனிசாமி, கந்தம்பட்டியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கினார்.

இதனிடையே, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை டி.பி.சத்திரம் பகுதி மக்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று நிவாரணம் வழங்குவதாக தகவல் வெளியகியுள்ளது. அந்த தகவலின்படி, சுமார் 300 குடும்பங்களுக்கு நேரில் (பனையூர்) வரவழைத்து மழை நிவாரண உதவிகளை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், தி.மலை, கடலூர் உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், புதுச்சேரியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.5000 வழங்குவதுபோல், தமிழ்நாட்டிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 04122024
TVK Vijay
Ravi,shuruthi (1) (1)
benjamin netanyahu donald trump
Devendra Fadnavis and Eknath Shinde
Congress MP Rahul Gandhi
shivamdube